2026 இல் surprise காத்திருக்கிறது! வீடியோவுடன் ஜாய் கிரிஸில்டா அதிரடி பதிவு
ஒரு பெண்ணின் வாழ்க்கையை சிதைத்து, ஒரு குழந்தையின் எதிர்காலத்தை கைவிட்டவன் ஆண் அல்ல.” ஒரு குழந்தைக்கு பெயர் கொடுக்க தைரியம் இல்லாதவன்….தந்தை என்ற உண்மையை விட்டு ஓட முடியாது… surprise waiting for 2026 என பதிவிட்டு ஜாய் கிரிஸில்டா தற்போது வெளியிட்டுள்ள புதிய காணொளி இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகின்றது.
ரங்கராஜ்- ஜாய் கிரிஸில்டா
அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

தற்போது மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் ஆண் குழந்தைக்கு தயான பின்னரும் இன்னும் குழந்தைக்காக நியாயம் கேட்டு ஜாய் போராடி வருகின்றார்.
முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்தது இவர் முதல் மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என குறிப்பிடும் ஜாய் மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியிருந்தார்.

ஜாய் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு பேரிடமும் தீவிரமான விசாரணை நடைபெற்றது.
அந்த சமயத்தில்தான் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் சூழலில் ரங்கராஜ் மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்த அவர்; இந்த போராட்டத்தில் வென்றுவிட்டதாகவே பலரும் கருதினார்கள்.

ஆனால் ரங்கராஜோ செம ட்விட்ஸ் கொடுக்கும் வகையில் இந்த திருமணம் மிரட்டலின் பேரில் தான் நடைபெற்றது தான் DNA பரிசோதனைக்கு தயார் என அறிக்கை வெளியிட்டார்.
குறித்த அறிக்கை இணைத்தள வாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.ஆனால் இன்றுவரையில் DNA பரிசோதனைக்கு செல்லாமல் ஏமாற்றி வருகின்றார்.

இந்நிலையில், surprise waiting for 2026 என பதிவிட்டு ஜாய் கிரிஸில்டா தற்போது ரங்கராஜின் காதல் லீலைகள் அடங்கிய புதிய காணொளியை வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |