எப்பொழுதும் ராணியாக வாழும் பெண்கள் குறித்து தெரியுமா? இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தான்
மற்றவர்களின் உதவி இல்லாமல் சொந்த காலில் முன்னேறும் பெண்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக ஜோதிடத்தின் படி ஒருவர் பிறந்த நட்சத்திரம், ராசி இவற்றினைக் கொண்டு அவர்களின் தனித்தன்மை, ஆளுமை இவற்றினை கூற முடிகின்றது.
அந்த வகையில் எந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இயற்கையிலேயே ராணியாக இருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

ரோகினி
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் நிலையான சிந்தனை கொண்டதுடன், கடினமாக உழைத்து முன்னேறவும் செய்வார்கள்.
வாழ்க்கையில் எந்தவொரு முன்னேற்ற முடிவையும் தெளியாக எடுப்பதுடன், ஒவ்வொரு நிலையிலும் தனக்கான வெற்றியினை தக்க வைப்பார்கள்.
எந்த தடைகளையும் சமாளித்து மேல் எழும்பும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மகம்
மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தலைமைத்துவ பண்புகளைக் கொண்டவராகவும், மற்றவர்களை சார்ந்து இல்லாமலும் இருப்பார்கள்.
இந்தவொரு முடிவுகளையும் தைரியமாக சந்திக்கும் இவர்கள், குழந்தை பருவத்திலேயே தெளிவான இலக்கை நிர்ணயிப்பார்கள்.
அதிகாரம், நிர்வாகம் இவற்றில் விரைவான அங்கீகாரத்தையும் பெறுவார்களாம்.

சுவாதி
சுவாரதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். மற்றவர்களின் கட்டளைகளை பின்பற்றி நடக்க விரும்பாத இவர்கள், தாங்கள் விரும்பும் பாதையில் தான் விரும்பி செல்வார்கள்.
எந்த கடினமான சூழ்நிலையாக இருந்தாலும் தனியாக போராட தயங்காத இவர்கள், எந்தவொரு வேலையிலும் வெற்றியை பெறுவார்கள்.
மூலம்
மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் குருவின் ஆசியை முழுமையாக பெற்றிருப்பதுடன், சிறுவயதில் சிரமத்தை எதிர்கொண்டாலும், வலிமையாக காணப்படுவார்கள்.
தனக்கு ஏற்படும் பயத்தைக் கூட பலமாக மாற்றும் இவர்கள், என்ன கஷ்டங்கள் மேற்கொண்டாலும் தங்களது வளர்ச்சியில் துணிந்து இருப்பார்கள்.
ஒரு இலக்கை நிர்ணயித்து அதை அடைவதற்கு எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். சொந்தகாலில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும்.

திருவோணம்
திருவோண நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் புதிய விடயங்களை கற்றுக்கொள்ள விரும்புவதுடன், அதிக ஆர்வம் கொண்டவராகவும் இருப்பார்கள்.
வார்த்தைகள் மற்றும் அறிவின் மூலம் திறமையை வெளிக்காட்டும் இவர்கள் யாரையும் நம்பாமல் தன்னைத் தானே சார்ந்திருப்பார்கள்.
கல்வி, ஊடகம் என எந்த துறையினை தேர்தெடுத்தாலும் அதில் உயர்ந்த நிலைக்கு நிச்சயம் செல்வார்களாம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |