நடிகர் விஜய் அணிந்திருந்து ப்ளூ ஜாக்கெட்டின் விலை எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சி ஆகிடுவீங்க
நடிகர் விஜய் ஜனநாயகன் பட விழாவிற்கு மலேசியா சென்றுள்ள நிலையில், அவர் அணிந்திருந்த ஜாக்கெட்டின் விலை தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்
தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக வலம்வரும் நடிகர் விஜய், தற்போது அரசியலில் பயங்கர பிஸியாக இருந்து வருகின்றார்.
சுமார் 33 வருடங்களாக சினிமா துறையில் உச்சத்தில் இருக்கும் இவர், கடைசியாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி மலேசியாவில் நடந்த நிலையில், விஜய்யைக் காண பல தமிழர்கள் மலேசியா சென்றதுடன், அவருக்கு அங்கு பலத்த வரவேற்பும் கொடுத்தனர். குறித்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.
குறித்த நிகழ்ச்சியில் பல சுவாரசியமான சம்பவங்களை விஜய் செய்தது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. நிகழ்ச்சி முடிந்து சென்னை வந்த விஜய்யை மக்கள் சூழ்ந்த நிலையில், தடுமாறி கீழே விழுந்தார்.

ஜாக்கெட்டின் விலை
தற்போது விஜய் பட விழாவில் அணிந்திருந்த ஜாக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது ப்ளூ டெனிம் ஜாக்கெட் அணிந்திருந்தார். இதன் விலை எவ்வளவு என்பதை ரசிகர்கள் தீயாய் அலசி ஆராய்ந்து வந்தனர்.
இந்நிலையில் குறித்த ஆடை GIORGIO ARMAN-யின் ஜாக்கெட் என்றும், இந்த ப்ளூ டெனிம் ஜாக்கெட்டின் விலை சுமார் ரூ.1,24,490 என்று தெரியவந்துள்ளது. இதனைக் கேட்ட ரசிகர்கள் பயங்கர அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |