நடிகர் விஜய் மகன் சஞ்சய்யா இது? கோட் சூட்டில் அச்சு அசல் அப்பாவைப் போன்று இருக்காங்களே..
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்யின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது அடுத்தடுத்து தனக்கான இடத்தினை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.
தற்போது அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ள விஜய், பரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றார். வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
அதுமட்டுமின்றி கடைசியாக தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இதன் உறுதியான தகவல் எதுவும் வெளியாகியுள்ளது.
ஹெ.ச் வினோத் இந்த திரைபடத்தை இயக்க உள்ளதாக உறுதியாக கூறப்படுவதுடன், சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் கூறப்படுகின்றது.
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சமீபத்தில் இயக்குநராக அறிமுகமானார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சஞ்சய் கருப்பு நிற கோட் சூட்டில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை அவதானித்த ரசிகர்கள் சஞ்சய், கோட் சூட்டில் அச்சு அலசாக நடிகர் விஜயை போலவே இருப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |