நடிகர் விஜய் சேதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நடிகர் விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார்.
பின்பு அடுத்தடுத்து பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாகவும், ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடத்தினை பிடித்துள்ளார்.
ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் நடித்து மாபெரும் வெற்றி பெற்று வரும் இவர், தனது 50வது படமான மகாராஜா படத்திற்கு சம்பளம் வாங்காமல் நடித்ததாகவும், படம் வெற்றியான பின்பு லாபத்திலிருந்து பங்கு வாங்கிக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
அடுத்தடுத்து கைவசம் பல படங்களை வைத்திருக்கும் இவரது சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
சொத்து மதிப்பு
நடிகர் விஜய் சேதிபதி ஜவான் மற்றும் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்திற்கு 21 கோடி ரூபாய் சம்ளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
விளம்பர படங்களில் நடிப்பதற்கு ரூ.50 லட்சம் வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படும் நிலையில், இவருக்கு சென்னை கீழ்ப்பாக்கத்திலும், எண்ணூரிலும் இரண்டு வீடுகள் இருக்கின்றதாம்.
இதுமட்டுமின்றி இவர் ரூ. 1.76 கோடி மதிப்பு மிக்க BMW 7 series கார், சுமார் 39 லட்சம் மதிப்புமிக்க Mini Cooper Car, Toyota மற்றும் Innova ஆகிய சொகுசு கார்களை வைத்துள்ளார்.
ஆடம்பர வீடு, சொகுசு கார்கள், மாத வருமானம் என எல்லாம் சேர்த்து விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு ரூ.175 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |