சுற்றுலா சென்ற இடத்தில் மனைவியை பறிகொடுத்த நடிகர்! கடும் துயரத்தில் திரையுலகம்
வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் பிரபல நடிகர் விஜய ராகவேந்திராவின் மனைவி மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா போல் கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய ராகவேந்திரா.
இவர் ஆரம்ப காலங்களில் குழந்தை நட்சத்திரமாக இருந்து பின்னர் முன்னணி நடிகரானவர்.
இதனை தொடர்ந்து விஜய ராகவேந்திரா கடந்த 2007-ம் ஆண்டு ஸ்பந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு சவுர்யா என்ற மகன் உள்ளார். விஜய ராகவேந்திரா போல் அவரின் மனைவியும் ஒரு நடிகை தான்.
இவர் கடந்த கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த அபூர்வா என்கிற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த துயரம்
இந்த நிலையில் மனைவி, குழந்தையுடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு விஜய ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பயந்த விஜய ராகவேந்திரா மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த தம்பதிகள் தங்களின் திருமண நாளை கொண்டாட சரியாக 19 நாட்கள் இருந்த நிலையில் இப்படியொரு துயரம் நிகழ்ந்துள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள், குறித்த நடிகருக்கு ஆறுதல் கூறும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |