நடிகர் விஜய்குமார் வீட்டில் திருமண கொண்டாட்டம்... வருங்கால கணவருடன் ரொமான்ஸ் புகைப்படம் வெளியிட்ட பேத்தி
நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயகுமார்
பழம்பெரும் நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள் என்பது அனைவரும் அறிந்ததே. முதல் மனைவியின் சம்மதத்துடனே இரண்டாவது மனைவியை திருமணம் செய்தார்.
முதல் மனைவி முத்துக்கண்ணுக்கு பிறந்த குழந்தைகள் தான் 2 பெண் மற்றும் ஒரு ஆண் ஆவார். இதில் இரண்டு பெண்களும் திருமணமாகி வெளிநாட்டில் செட்டிலாகியுள்ளனர். மகன் மட்டும் தற்போது திரையுலகைக் கலக்கிக் கொண்டிருக்கும் அருண் விஜய் ஆவார்.
விஜயகுமாரின் இரண்டாவது மனைவி நடிகை மஞ்சுளா ஆவார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவர்கள் மூன்றுபேரும் சினிமாவில் நடித்துவரும் நிலையில், வனிதா மட்டும் பல சர்ச்சைகளில் சிக்கி குடும்பத்திலிருந்து விலகி வசிக்கின்றார்.
இந்நிலையில் மூத்தமனைவியின் மகளான அனிதா மகள் தியாவிற்கு பிரம்மாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
விஜயகுமார் வீட்டில் கிரகபிரவேசம் என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது தியா வெளியிட்டுள்ள புகைப்படத்தினால் தான் உண்மை தெரியவந்துள்ளது.
வருங்கால கணவருடன் தியா ரொமான்ஸாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். ஆனால் மாப்பிள்ளையின் விபரம் எதுவும் வெளிவரவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |