நடிகர் விஜய்யின் சம்பளம் 200 கோடியா? வாயை பிளக்கும் பிரபலங்கள்
நடிகர் விஜய் அடுத்த படத்தில் வாங்க போகும் சம்பளம் தொடர்பில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
தமிழ் சினிமா
தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் தான் நடிகர் விஜய்.
இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் பல இயக்குநர் மற்றும் சக நடிகைகளால் வேண்டாம் என நிகாரிக்கப்பட்டவர் என பலர் பேட்டிகளில் கூறி பார்த்திருப்போம்.
ஆனால் தற்போது இவருடன் இணைந்து நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்காத என நடிகர்கள் ஏங்கி வருகிறார்கள். இதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்,உருவாகும் “லியோ” படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இந்த திரைப்படம் படபிடிப்பில் இறுதிகாலத்தில் இருப்பதால் வெங்கட் பிரபு அடுத்த திரைப்படத்தில் எடுக்க போவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை நடிகர் விஜய் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோக்காட்சி பார்த்த ரசிகர்கள், இந்த திரைப்படம் தொடர்பாக அதிகமாக தேடி வருகிறார்கள்.
இரட்டிப்பாகும் விஜயின் சம்பளம்
இந்த நிலையில் இவரின் சம்பளம் தொடர்பில் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்தவகையில் விஜயிற்கு அடுத்த படத்திலிருந்து 200 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என அந்த தகவல்கள் கூறுகின்றது.
மேலும் லியோ படம் ப்ரீ ரிலீஸ் பிசினஸில் 400 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாம். இந்த திரைப்படம் திரைக்கு வரும் போது பலகோடி வசூலை பெறும் என அந்த படக்குழுவினர் எதிர்பார்க்கின்றார்கள்.
விஜயின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல் உண்மையெனின் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக விஜய் பார்க்கப்படுகின்றார்.