தளபதி விஜயுடன் விமானத்தில் நடிகர் சரத்குமாரின் மகள்! விதவிதமான செல்ஃபியை பார்த்து கிரங்கி போன ரசிகர்கள்
நடிகை வரலட்சுமி சரத்குமார், தளபதி விஜயுடன் எடுத்து கொண்ட விதவிதமான செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விஜய் சென்னையில் இருந்து ஹைதராபாத் போன விமானத்தில், எதேர்சையாக வரலட்சுமி சரத்குமாரை பார்க்க நேர்ந்துள்ளது.
அதுவும் விஜய் பக்கத்துக்கு சீட்டில் தான், வரலட்சுமிக்கு சீட்டாம். இந்த அற்புதமான நாள் குறித்த சந்தோஷத்தை ரசிகர்களிடம் புகைப்படத்துடன் வெளியிட்டு வரலட்சுமி சரத்குமார் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதேவேளை, வரலட்சுமி சரத்குமார் நடிகர் விஜயுடன், சர்க்கார் படத்தில் இணைந்து நடித்துள்ளார். மேலும் அவர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.



