டாக்டர் ஆவேன்!..10 வயதில் சூர்யாவிற்கு சவால் விட்ட சிறுவன் - தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?
10 வயதில் நடிகர் சூர்யாவிற்கு சவால் விட்ட சிறுவன் தற்போது என்ன செய்கிறார் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் சூர்யா
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா.
இவர் நடிப்பில் சமூகத்திற்கு தேவையான தொனிப்பொருளுடன் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா, மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், நான்கு பிலிம்பேர் விருதுகள் தெற்கு, இரண்டு எடிசன் விருதுகள், ஒரு சினி எம் ஏ விருது மற்றும் விஜய் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
சினிமாவில் எப்படி முன்னணி நடிகராக இருக்கிறாரோ. இவர் சமூக பணியிலும் முன்னணியில் இருந்து வருகிறார்.
10 வயது சிறுவன் சூர்யாவிற்கு விட்ட சவால்
அந்த வகையில் சூர்யாவின் தலைமையில் அகரம் அறக்கட்டளை ஒன்று இயங்கி வருகின்றது.
இவரின் உதவியால் கூலி தொழிலாளி ஒருவரின் மகன் வைத்தியாராக மாற்றியுள்ளார்.
குறித்த சிறுவன் நந்தகுமார் சூர்யா நடத்திய பிரபல நிகழ்ச்சியொன்றில் அவனின் 10 வயதில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது “ நான் நன்றாக படித்து ஒரு வைத்தியராக வருவேன்..” எனக்கூறியுள்ளான். தற்போது நடிகர் சூர்யா அவரை வைத்தியராக்கியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் சூர்யாவின் நற்பணிகளுக்கு ஆதரவு வழங்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |