சூர்யாவுக்கு சீக்ரெட்டாக வந்த ஒரு லவ் லெட்டர்... இரகசியத்தை உடைத்த சூர்யாவின் தங்கை!
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் சூர்யா. அண்மையில் வெளியான விக்ரம் படத்தில் இவரது கேரக்டரான ரோலக்ஸ் இந்தியளவில் ட்ரெண்டாகி பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய சூர்யாவின் தங்கை பிருந்தா சூர்யாவுக்கு குவிந்த லவ் லெட்டர்ஸ் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் சூர்யாவின் முதல் படம் நேருக்கு நேர் வரும் போது நான் கல்லூரி முதலாம் ஆண்டு படித்துகொண்டிருந்தேன். அப்போ அண்ணாவோட ரசிகர்கள் நிறைய லெட்டர்ஸ் எழுதுவாங்க.
அதிகமா மலேசியா, சிங்கப்பூர் இருந்து தான் லெட்டர்ஸ், மெயில் வரும், போஸ்ட் மேன் வீட்டிற்கு கொண்டு வந்து தருவார்.
அதிகளவில் சூர்யாவுக்கு லவ் லெட்டர்ஸ் வரும்,. அதில் எனக்கும் சேர்த்து, உனக்கு நல்ல அண்ணியா இருப்பேன்., உன்ன நான் நல்லா பாத்துக்குவேன்.
உங்க அண்ணா கிட்ட கொஞ்சம் எடுத்து சொல்லு என கூறி மாடர்ன் டிரஸ், சேலை என வித்தியாசமாக புகைப்படங்கள் எடுத்து அனுப்புவார்கள்.
என அவரது தங்கை பிருந்தா சிவக்குமார் சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.