சூர்யா மகனா இது? அப்பாவை மிஞ்சிய அழகு... வைரலாகும் புகைப்படம்
நடிகர் சூர்யா தன் மகனுடன் ISPL கிரிக்கெட் பார்க்க வந்துள்ளார். இதன் போது எடுக்கப்பட்ட சூர்யா மகன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகர் சூர்யா மகன்
நடிகர் சூர்யாவுக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர் தன் நீண்ட நாள் காதலியான நடிகை ஜோதிகாவை குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
சினிமாவில் டாப் ஹீரோயினாக இருக்கும் போது சூர்யாவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா, தன் காதல் கணவருக்காக தனது சினிமா வாழ்க்கை விட்டு விலகினார்.

திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு விலகிய கொஞ்சம் விலகி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இக்கின்னறர்.
சென்னையில் தன் தந்தை சிவக்குமார், தம்பி கார்த்தி உடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த சூர்யா, கடந்த ஆண்டு மும்பையில் செட்டில் ஆனார்.

தனது மகன் தேவ் மற்றும் மகள் தியாவின் படிப்புக்காக தாங்கள் இருவரும் மும்பையில் குடியேறிவிட்டதாக சூர்யா, ஜோதிகா கூறி இருந்தனர். இந்த நிலையில் சூர்யா தன் மகனுடன் ISPL கிரிக்கெட் பார்க்க வந்தள்ளார்.
இதன்போது சூர்யாவின் மகன் வளர்ந்ததை பார்த்த ரசிகர்கள் அதை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |