ஹீரோவாக உருவெடுத்துள்ள நடிகர் சூரி: ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் நகைச்சுவையாக நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்து , ஹீரோவான பிரபலங்கள் பலரும் உண்டு. அந்த பட்டியலில் நடிகர் சூரியும் இணைந்துள்ளார்.
நடிகர் சூரி
வெண்ணிலா கபடி குழு படத்தில் காமெடியனாக அறிமுகமான பரோட்டா சூரி தற்போது படத்தின் கதாநாயகனாக வளர்ந்துள்ளார்.
விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக மாறிய இவர், தற்போது கைவசம் மூன்று திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
விடுதலை இரண்டாம் பாகம், கொட்டுக்காளி, கருடன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடிக்க ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
சூரியின் சம்பளம்
இந்த படங்களில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி நடித்து வரும் படம் தான் கருடன். இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடிக்கிறார்.
சமீபத்தில் வெளியான கருடன் படத்தின் வீடியோவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இந்நிலையில், இப்படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் சூரி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கருடன் படத்தில் நடிக்க 8 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |