வாழைப்பழ காமெடியில் கலக்கிய நடிகரி மரணத்திற்கு சூரி இரங்கல்... தீயாய் பரவும் பதிவு
இணை இயக்குநரும் நடிகர் பவுன்ராஜ் மறைவுக்கு நடிகர் சூரி இரங்கள் தெரிவித்துள்ளார்.
சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா ஆகிய படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் நடிகர் பவுன்ராஜ்.
ரஜினி முருகன் படத்தில் இடம் பெற்ற வாழைப்பழ காமெடியும் அவருக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.
அண்ணன் பவுன்ராஜுடன் நடிச்சது இன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு , அப்படி ஒரு இயல்பான நகைச்சுவை நடிகன்!
— Actor Soori (@sooriofficial) May 15, 2021
அண்ணனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்? pic.twitter.com/g8aQI27ADU
இந்நிலையில் அவரது திடீர் மரணம் தமிழ் சினிமாவிலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவருடைய மறைவுக்கு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பவுன்ராஜூடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள நடிகர் சூரியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், அண்ணன் பவுன்ராஜுடன் நடிச்சது இன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு, அப்படி ஒரு இயல்பான நகைச்சுவை நடிகன்! அண்ணனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.