உடன்பிறப்பிற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பிறந்த நாள் பரிசு
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய அக்காவின் பிறந்தநாளுக்கு கொடுத்த பரிசு தொடர்பான விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த அமரன் திரைப்படம் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரித்து இருந்தார். நடிகர் சிவகார்த்திகேயன் கெரியரில் அதிக வசூல் செய்த படமாக அமரன் திரைப்படம் இதுவரையில்350 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ளது.
அக்காவின் பிறந்தநாள் பரிசு
இந்த நிலையில், நேற்றைய தினம் அவருடைய அக்கா பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த சிவகார்த்திகேயன், “என்னுடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன், என்னுடைய அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். குழந்தை பிறந்த பின்னர் எம்பிபிஎஸ் படித்தது முதல், 38 வயதில் மருத்துவ மேற்படிப்பை மெரிட்டில் படித்து கோல்டு மெடல் வாங்கியது வரை நீ அனைத்து தடைகளையும் கடந்து வந்திருக்கிறாய். உங்களை பார்த்து அப்பா மிகவும் பெருமைப்படுவார். அவளுக்கு பக்கபலமாக இருக்கும் என்னுடைய அத்தானுக்கும் நன்றி” என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
அத்துடன் மினி கூப்பர் கார் ஒன்றையும் வாங்கி பரிசாக கொடுத்துள்ளார். அந்த காரின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதைப்பார்த்த ரசிகர்கள் “அக்கா மேல அம்புட்டு பாசமா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |