சிம்பு வீட்டிற்கு வந்த புதிய வாரிசு... உச்சக்கட்சி மகிழ்ச்சியில் குடும்பத்தினர்
நடிகர் சிம்புவின் தம்பி குறளரசனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிம்பு வீட்டிற்கு புது வரவு
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட டி.ராஜேந்தர் நடிகை உஷாவை காதலித்து திருமணம் செய்தார்.
இந்த தம்பதிகளுக்கு சிலம்பரசன், குறளரசன், இலக்கியா என மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், சிம்பு முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார்.
மகள் இலக்கியாவிற்கு கடந்த 2014ம் ஆண்டு அபிலாஷ் என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்கள் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
நடிகர் பல காதல் தோல்வியை சந்தித்து சிங்கிளாக வாழ்ந்து வரும் நிலையில், குடும்பத்தினர் பெண் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
சிம்புவின் திருமணம் தாமதமாகி கொண்டே சென்றதால், கடந்த 2019ம் ஆண்டு குறளரசன் தன்னுடைய காதலி நபீலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சில தினங்கள் முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனால் டி.ஆர் மற்றும் உஷா தாத்தாவாகிய நிலையில், நடிகர் சிம்பு பெரியப்பா ஆகியுள்ளார். குளரலசனின் குழந்தைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |