பிரபல நடிகையுடன் சிம்புவிற்கு திருமணமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் சிம்பு தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு
குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமான சிலம்பரசன் 2002ம் ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
பல சர்ச்சைகள், நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பின்பும் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருகின்றார்.
சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார்.
எனினும் தற்போது 40 வயதாகும் சிம்பு இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே இருக்கிறர். இவரது திருமணம் குறித்த தகவல் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருவது வழக்கமாக இருக்கின்றது.
நடிகையுடன் திருமணமா?
நடிகர் சிம்புவும், நயன்தாராவும் காதலித்து வந்த நிலையில், பின்பு இருவரும் பிரிந்தனர். பின்பு ஹன்சிகாவை காதலிப்பதாக கூறிய நிலையில் அவரையும் பிரிந்தார்.
சமீபத்தில் தெலுங்கு நடிகை நிதி அகர்வாலும் சிம்புவும் காதலித்து வருகின்றனர் எனவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக வெளியான தகவலும் வதந்தியாக முடிந்தது.
இந்நிலையில் தந்தை டி.ஆருக்கு அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் சிம்புவிற்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெண் தேடி வருகன்றனர்.
மேலும் தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடி மகளான வரலட்சுமியை சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்கவும் டி. ராஜேந்திர முடிவு செய்துள்ளாராம்.
சரத்குமாரின் மகளான வரலட்சுமி குணச்சித்திர வேடங்களிலும், வில்லி கேரக்டரிலும் நடித்து வருகிறார்.
இவரும் விஷாலும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இருவரும் பிரேக் அப் செய்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் சிம்புவும் வரலட்சுமியும் திருமண செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |