விஜயகாந்த் இறப்பிற்கு பின்பு முதன்முதலாக பிரேமலதா ஏற்றிய கொடி... அருந்து விழுந்ததால் பரபரப்பு
தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் இன்று முதன்முறையாக கட்சிக் கொடி ஏற்றிய நிலையில், பாதியிலேயே கயிறு அறுந்து கொடி கீழே விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடி ஏற்றிய பிரேமலதா
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமான நிலையில், அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
லட்சக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் என இறுதிசடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதனால் தேமுதிக கட்சிக் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது.
தற்போது ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், கொடியை முழு கம்பத்தில் பறக்க விட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியிருந்தார்.
அதன்படி இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழகத்தில் பிரேமலதா முதன்முதலாக கொடியை ஏற்றிக் கொண்டிருந்த தருணத்தில் பாதியிலேயே கொடி அருந்து விழுந்துள்ளது.
தொடர்ந்து, மீண்டும் கயிற்றில் கட்டி, கொடியேற்றினார் பிரேமலதா விஜயகாந்த். கொடி கீழே விழுந்ததால் சிறிது சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பிரேமலதா கூறிய காரணம்
கொடி அரை கம்பத்தில் சென்ற போது அருந்து விழுந்தது, ஒரு தடைக்கு பின்பு கிடைக்கும் வெற்றியை குறிக்கின்றது. கழக கொடி அறுந்து விழுந்ததன் மூலம் இதுவரை தங்களுக்கு இருந்த அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து மீண்டும் தேமுதிக கொடி பட்டொளி வீசி பறக்கின்றது என்று கூறியுள்ளார்.
வள்ளல் விஜயகாந்த் மெமோரியல் அன்னதானம் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை மூலம் தினமும் நினைவிடத்திற்கு வரும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்த அனைத்து உதவிகளையும் நாங்கள் தொடர்ந்து செய்ய உள்ளோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |