நான் படத்தில் நடித்த சாக்லேட் பாய் ஹுரோவா இது? புகைப்படத்தை பார்த்து அசந்துபோன ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் சரியான வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டே ஒதுங்கி போய் விடுகிறார்கள்.
அதிலும் ஒன்று, இரண்டு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தும் தன்னை நிரூபிக்க முடியாமல் விலகி விடுவார்கள்.
அந்த வகையில், ஜூன் 6 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சித்தார்த் வேணுகோபால், இவர் நடித்த ஆனந்தத்தாண்டவம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது.
அதன் பின்பு, விஜய் ஆண்டனியுடன், நான் என்ற படத்தில் சாக்லேட் பாய்யாக நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இவரின் நடிப்பு அப்போது பரவலாக பேசப்பட்டு வந்தது.
ஆனால், மூன்று படங்களுக்கு மேல் அவர் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லையாம். இந்நிலையில், இவரை பற்றி எந்த ஒரு தகவலும் தெரியாத நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு படு ஸ்டைலாக உள்ளார்.