மயில்சாமியின் உடலை பார்த்து கதறியழுத நடிகர் சித்தார்த்!
நடிகர் மயில்சாமியின் இறுதிச்சடங்கில் கலந்துக் கொண்ட நடிகர் சித்தார்த் துக்கத்தில் பேசமுடியாமல் கண்ணீர்விட்டுள்ளார்.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் மயில்சாமி. இவர் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை சேர்ந்தவர்.
சினிமா மீதுள்ள அதீத நாட்டம் காரணம் பல தரப்புகளில் வாய்ப்புகள் தேடி 1984ஆம் ஆண்டு வெளியாகிய “தாவணி கனவுகள் ” என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
நடிப்பையும் சமூக சேவகராக பலருக்கும் உதவிகள் செய்து வந்தார், உதவி என்று கேட்டவுடன் சற்றும் யோசிக்காமல் செய்யும் இளகிய மனம் படைத்தவர் மயில்சாமி.
நேற்றைய தினம் திடீர் நெஞ்சு வலிக்காரணமாக இயற்கை மரணம் எய்தியுள்ளார், திரையுலக பிரபலங்கள் பலரும் மயில்சாமிக்கு இறுதிஅஞ்சலி செலுத்தினர்.
இதன்போது நடிகர் சித்தார்த் இறுதிச் சடங்கில் மயில்சாமியின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார்.
அதன்பின் பேசுகையில், மயில்சாமி அண்ணன் மிகவும் நல்லவர், செட்டிலுள்ளவர்களை அவருடைய குடும்பம் போல் பார்த்துக் கொள்வார்.
அவர் ஒரு சிவன் பக்தர், அவரின் அன்பிற்கு அளவு இல்லை. நீண்ட நாள் பழக்கம் எனக்கு என அதீத மன வருத்தத்துடன் பேசியுள்ளார்.