102 வயதில் உயிரிழந்த பாட்டி: இறுதிச்சடங்கில் அலறி அடித்துக்கொண்டு ஓடிய உறவினர்கள்
102 வயதில் உயிரிழந்த வயோதிப பாட்டியின் இறுத்திச்சடங்கில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தைப் பார்த்து பின்னாங்கால் பிடரி ஓட்டம் எடுத்த உறவினர்கள் அப்படி என்ன நடந்தது தெரியுமா?
உயிரிழந்த பாட்டி
இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலம் நர்சன் குர்த் பகுதியை சேர்ந்த ஞானதேவி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இவருக்கு தற்போது 102 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஞானதேவி திடீரென மயங்கி விழுந்துள்ளார் இதனால் உடனே மருத்துவரை வீட்டிற்கு அழைத்து வந்து பரிசோதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஞானதேவி இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதைக் கேட்ட குடும்பத்தினர் இவர் நூறாண்டுக்கு மேல் வாழ்ந்ததால் அவரை சிறப்பாக அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரின் இறுதிக்கிரியைக்கு உற்றார் உறவினர்களுக்கு தகவல் கொடுத்திருந்தனர்.
இறுதிச்சடங்கில் அதிர்ச்சி
இந்நிலையில் இறுதிச்சடங்கில் ஏராளமானோர் கலந்துக்கொண்டிருந்தர். அப்போது, இறுதிச் சடங்குகளுக்காக உடலைக் கூட்டிச் செல்லவிருந்த வேளையில், திடீரென ஞானதேவி உடலில் சலனம் ஏற்பட்டுள்ளது.
அவரின் உடல் கொஞ்சம் குலுங்கியதும் அம்மா கண்களைத் திறந்தார். இந்தக் காட்சியைக் கண்டு சிலர் பயத்துடன் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள், இன்னும் சிலர் மகிழ்ச்சியில் அவரைப் பார்த்த வண்ணம் இருந்தார்கள்.
சிறிது நேரம் கழித்து, சுயநினைவு வந்த ஞானதேவி, அந்தச் சூழலை உணர்ந்துக்கொண்டு சுற்றிமுற்றி பார்த்தார் வழமைக்குத் திரும்பினார்.
மேலும், இவர் மீண்டும் எழுந்த சம்பவம் ஞானதேவியின் குடும்பத்தில் மட்டுமல்லாமல் கிராமத்திலும் மூதாட்டி கொண்டாடி வருகின்றனர்.
தற்போது ஞானதேவி பழையபடி சாதாரணமாக நன்றாக சாப்பிட்டு வருகிறார். இவ்வாறு இறந்து மீண்டும் பிறந்த பாட்டியை தினமும் சென்று பார்த்து ஆசி பெற்று வருகின்றனர் சில மக்கள்.