60 வயதிலும் ஷாருக்கானின் கட்டுடலை பாதுகாக்கும் டயட் சீக்ரெட்- நீங்களும் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக சினிமா பிரபலங்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் அதிகமாக கவனம் செலுத்துவார்கள்.
அந்த வகையில், 60 வயதில் காலடி எடுத்து வைத்திருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் எப்படி இன்னும் இளமையாக இருக்கிறார் என்ற சந்தேகம் நம்மிள் பலருக்கும் வந்திருக்கும்.
அவரின் இந்த இளமை தோற்றத்தை எப்படி பராமரிக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். இது தொடர்பில் தேடிய போது ஷாருக்கானின் ஒழுக்கம் இதற்கு முக்கிய காரணம் என தெரியவந்தது.
நேற்றைய தினம் 60ஆவது பிறந்த நாளை கொண்டாடிய ஷாருக்கான், தன்னுடைய இளமைக்கான ரகசியத்தை பகிர்ந்து கொண்ட காணொளி இணைவயவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.

அப்படியாயின், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தன்னுடைய கட்டுடலை எப்படி பராமரிக்கிறார் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
எளிமையான உணவுப்பழக்கம்
ஷாருக்கான் இது தொடர்பில் பேசுகையில், “உறுதியான மற்றும் நிலையான அர்ப்பணிப்புத்தன்மை தான் என்னுடைய சுறுசுறுப்பிற்கு காரணம். எப்போதும் மிகவும் எளிமையான உணவு பழக்கத்தை கொண்டுள்ளதால் இன்றும் இளமையாக இருக்க முடிகிறது. தினமும் இரண்டு வேளை தான் உணவு எடுத்துக் கொள்கிறேன்.
ஆடம்பர உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் முளைகட்டிய தானியங்கள் அல்லது பயறுகள், கிரில்டு சிக்கன், ப்ரோக்கோலி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்கிறேன். நிறைந்த உணவை எடுத்துக் கொள்வதால் சீரான ஊட்டசத்து உடலுக்கு கிடைக்கிறது. எந்தவொரு டயட் முறையையும் நான் பின்பற்றவில்லை.

ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் மற்றும் சீரான அணுகுமுறை இவை இரண்டு தான் இளமைக்கான காரணமாக பார்க்கிறேன். லைட்டான உணவுகளை சாப்பிடுவது எனது தனிப்பட்ட விருப்பம்.
மேலும், சினிமா பார்ட்டி போன்ற சமூக நிகழ்வுகளில் பிரியாணி, ரொட்டி, பரோட்டா, நெய் அல்லது லஸ்ஸி தரப்பட்டால் மட்டும் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் கொஞ்சமாக எடுத்துக் கொள்வேன்..” என்றும் பேசியிருந்தார்.
அதிகாலை 5 மணிக்கு தூக்கம்
இரவு சீக்கிரமாக படுத்து, காலையில் எழுந்து வாழ்க்கையை துவங்குவது மனிதர்களின் இயல்பு, ஆனால் ஷாருக்கான் அதிகாலை 5 மணிக்கு தூங்கச் சென்று காலை 9 அல்லது 10 மணிக்குள் எழுந்து விடுவாராம்.

இதுவொரு அசாதாரணமான ஒழுக்கம் என்றாலும் அதனை தான் நீண்டகாலமாக செய்து வருகிறாராம். கடுமையான ஷூட்டிங் ஷெட்யூலிலும் ஷாருக்கான் அதிகாலை இரண்டு மணிக்கு வீட்டிற்கு சென்று அன்றாட வேலைகளை முடித்து விட்டு உடற்பயிற்சி செய்வாராம்.
இவர் கூறியதை வைத்து பார்க்கும் பொழுது ஷாருக்கான் பின்பற்றுவது ஆரோக்கியமான அணுகுமுறை என்றாலும் நீண்ட ஆயுளுக்கான மந்திரமாக பார்க்கப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |