மறைந்த நடிகர் சேதுராமனை அப்பா என்று அழைத்த மகள்! 4 ஆண்டு முன்பு நடந்ததை வெளியிட்ட மனைவி
மறைந்த கணவர் சேதுராமனிடம் அவரது குழந்தை அப்பா என்று அழைக்கும் காணொளியினை அவரது மனைவி உமா வெளியிட்டு ரசிகர்களை கலங்க வைத்துள்ளார்
நடிகர் சேதுராமன்
பிரபல மருத்துவரும் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானவருமானவர் தான் டாக்டர் சேதுராமன்.
இவர் சில படங்களில் நடித்திருந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டும் மார்ச் மாதம் 26ம் தேதி மாரடைப்பினால் உயிரிழந்தார்.
ஆனால் இவரது திருமணம் கடந்த 2016ம் ஆண்டு உமையாள் என்ற பெண்ணுடன் நடந்துள்ளது. திருமணமாகி 4 ஆண்டுகளுக்குள் இவரது சோகம் தற்போதும் மனைவியால் மீள முடியாமல் தவிக்கிறாள்.
குறித்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தனது மூத்த குழந்தை 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தையான சேதுராமனை அப்பா என்று அழைத்த பழைய காணொளியினை வெளியிட்டு, இன்றைய தந்தையர் தினத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டிருந்த பதிவில், “ இன்று தந்தையர் தினம். கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் குழந்தை முதல் முறையாக அப்பா என்று நீ கூப்பிட்டது சேது! நாங்கள் உங்களுடன் அழகான நினைவுகளை உருவாக்கினோம்; அதை நாங்கள் எப்போதும் போற்றுவோம். லவ் யூ டாடி.. சஹானா மற்றும் வேதாந்த்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |