மறைந்த நடிகர் சேதுராமனின் குழந்தைகளா இது? நல்லா வளர்ந்துட்டாங்களே
மறைந்த நடிகர் சேதுராமன் குழந்தைகளின் புகைப்படம் முதன்முதலாக வெளியாகி வைரலாகி வருகின்றது.
நடிகர் சேதுராமன்
'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகர் சேதுராமன், கடந்த 2020ம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
இவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தினையும் ஏற்படுத்தியது. மருத்துவராகவும் பணியாற்றி வந்த சேதுராமன் இறக்கும் போது அவரது மனைவி இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்து 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
கணவரின் இறப்பினால் வருத்தத்தில் மீள முடியாமல் இருந்த உமாவிற்கு இரண்டாவதாக மகன் பிறந்தார். கணவரின் இறப்பிற்கு பின்பு பிறந்த மகனால் தனது கணவரே பிறந்துள்ளதாக அவரின் பிரிவிலிருந்து உமா சற்று மீண்டு வந்தார்.
இந்த தம்பதிகளுக்கு முதலில் பெண் குழந்தை ஒன்றும் இருக்கின்றது. தற்போது மகன் மற்றும் மகளுடன் உமா வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகர் சேதுராமனின் குழந்தைகள் நன்றாக வளர்ந்துவிட்டதாக ரசிகர்கள் புகைப்படத்தினை அவதானித்து கூறி வருகின்றனர்.