தீவிர சிகிச்சை பிரிவில் பிரபல நடிகர்! அதிர்ச்சியில் திரையுலகினர்
அஜித்தின் வீரம் படத்தில் தம்பியாக நடித்த நடிகர் பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் பாலா
அன்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கடந்த 2003ம் ஆண்டு அறிமுகமானவர் தான் பாலா. இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார்.
மலையாள படங்களில் நடித்து வரும் இவர், அண்ணன் சிவா இயக்கிய வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்தார்.
கடந்த 2010ம் ஆண்டு அம்ருதா சுரேஷைக் காதலித்து திருமணம் செய்து கொண்டதுடன், கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
பின்பு கடந்த 2021ம் ஆண்டு எலிசபெத் உதயன் என்ற மருத்துவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த ஆகிய படங்களை எதிர்மறை வேடத்தில் கலக்கினார்.
தற்போது கல்லீரல் பாதிப்பு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூ-வில் பாலா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரைக் காண அவரது சகோதரரும், இயக்குனருமான சிறுத்தை சிவா கொச்சின் சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.