தீவிர நோயினால் நடிகர் சல்மான் கான் எடுத்த முடிவு - பின்னணி காரணம் இதோ
பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது ரூ.3000 கோடி சொத்துகளை குடும்பத்துக்கும் உறுப்பினர்களுக்கும் பிரித்துக் கொடுக்க முடிவெடுத்துள்ளார்.

நடிகர் சல்மான் கான்
நடிகர் சல்மான் கானுக்கு தற்போது 60 வயதாகிறது. இப்போதும் அவர் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே தான் இருக்கிறார்.
தற்போது சல்மான் கான் தன்னுடைய 3000 கோடி சொத்தை தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு பிரித்து கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முடிவிற்கான காரணம் என்ன?
சொத்தை பிரித்து கொடுக்கும் அளவிற்கு சல்மானுக்கு பிரச்சனை என்ன என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த முடிவிற்கு காரணம் சல்மான் கானுக்கு தீவீர உடல் நலப்பிரச்சனை தான் எனப்படுகின்றது.
சல்மான் கான் அவருக்கு ‘டிரைஜெமினல் நியூராலஜியா’ (Trigeminal Neuralgia) நோய் இருப்பதாக கூறியிருந்தார். இது நரம்பு மண்டலத்தை தாக்கும் ஒரு நோய் எனப்படுகின்றது.

மருத்துவர்கள் இந்த நோயை ‘தற்கொலை நோய்’என கூறுகின்றனர். இந்த நோய் வந்தால் முகம் மற்றும் தாடைப்பகுதியில் கடுமையான வலி இருக்குமாம்.
அதிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்துகொண்டே இருக்குமாம். இதனால் தான் இதற்கு தற்கொலை நோய் என்று பெயர்.
இதை சல்மான் கானும் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதாவது “வலி தாங்க முடியாமல் நானும் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்” என கூறியிருக்கிறார்.

மேலும் எதிரிக்கு கூட இந்த நோய் வரக்கூடாது என கூறி இருக்கிறார். சல்மான் கான் சுமார் 7 வருடமாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளாராம்.
இந்த காரணத்தினால் தான் அவருடைய குடும்பத்திற்கு நிதி நிலமையில் பிரச்சனை வரக்கூடாது சொத்து இருந்தும் அவருக்கு பின் அனுபவிக்கப்போவது யாரும் இல்லை என்பதற்காக அவர் சொத்தை குடும்ப உறுப்பினர்களுக்கு எழுதி வைக்க முடிவெடுத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |