தனிமையில் ஆர்த்தி : கெனிஷாவுடன் ரொமான்ஸ் பண்ணும் ரவிமோகம்! வைரலாகும் வீடியோ
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில், பழமையான மற்றும் மிகவும் புகழ்பெற்ற அம்மன் தலம் மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் உட்வத்தில் பாடகி கெனிஷா பாடியுள்ளார்.
அதன் போது மேடையில் சென்று நடிகர் ரவி மோகன் கெனிஷாவை மெய் மறந்து கட்டியணைத்த காணொளி இணையத்தில் வெளியாகி காட்டு தீயாய் பரவி வருகின்றது.
ரவி மோகன்
தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் ரவி மோகன்.
ரவி மோகன் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இவரின் விவாகரத்து அறிவிப்பு வெளியான சமயத்தில் இருந்தே பாடகி கெனிஷா தொடர்பான சர்ச்சையும் ஆரம்பமாகியது.
ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் தாங்கள் வெறும் நண்பர்கள்தான் என்றும், அதைத்தாண்டி தங்களுக்குள் ஒன்றும் இல்லை என்றும் கூறினர்.

ஆனால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமணத்தில் ஒரு நிறத்தில் ஆடை அணிந்து இருவரும் ஜோடியாக கலந்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சைகளை உண்மையாக்கியது.
ஆர்த்தியை பிரிய வேண்டும் என்பதில் ரவி மோகன் இவ்வளவு பிடிவாதமாக நின்றதற்கு காரணமே, 'அவருக்கு ஆர்த்தியும், அவரது தாயும் கொஞ்சம்கூட மரியாதை கொடுக்கவில்லை என்பது தான் என்பதை ரவி மோகன் பல இடங்களில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இது குறித்து உண்மையாக காரணம் சரியாக தெரியவில்லை. குழந்தைகளுடன் ஆர்த்தி தனியான வாழ்ந்து வரும் நிலையில், ஆர்த்தியை பிரிந்ததில் இருந்தே சர்சையின் முக்கிய புள்ளியான பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வருகின்றார்.

இந்நிலையில் அனைத்து வதந்திகளையும், சர்ச்சைகளையும் உண்மையாக்கும் வகையில் கெனிஷா தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படுவைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |