கெனிஷாவுடன் சொத்து பதிவு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ரவி மோகன்
ரவி மோகன், கோவாவில் இடம் ஒன்றினை வாங்கி அதனை தனது தோழி கெனிஷாவுடன் பதிவு செய்துள்ள நிலையில், தான் திருமணமாகாதவர் என்று குறிப்பிட்டிருப்பதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரவி மோகன்
தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக இருக்கும் ரவி, ஜெயம் படத்தில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவரது பெயர் ஜெயம் ரவி என்று ஆகியது.
இப்படத்தினைத் தொடர்ந்து பல படங்களை நடித்து ரசிகர்களின் நாயகனாகவே மாறினார். இவர் நடித்த தனி ஒருவன், பொன்னியின் செல்வன் படத்திற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
இவர் ஆர்த்தி என்ற பெண்ணை 2009ம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திடீரென ஆர்த்தியை பிரிவதாக முடிவெடுத்து அறிக்கையினை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

பின்பு தனது பெயர் ஜெயம் ரவி என்பதையும் ரவி மோகன் என்றும் மாற்றினார். கோவாவைச் சேர்ந்த பாடகி கெனிஷாவுடன் இவருக்கு நட்பு ஏற்பட்டு, இருவரும் தற்போது ஒன்றாக அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சென்று வருகின்றனர்.

கெனிஷாவுடன் சொத்து வாங்கிய ரவி மோகன்
இந்நிலையில் ரவி மோகன் தனது தோழி கெனிஷாவுடன் சேர்ந்து கோவாவில் புதிய மனை ஒன்றினை வாங்கியிருப்பதாகவும், இதன் மதிப்பு 42 லட்சம் என்றும் கூறப்படுகின்றது.
மேலும் மனை வாங்கும் போது ரவி மோகன் சமர்பித்த ஆவணத்தில் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று குறிப்பிட்டுள்ளாராம்.

ரவி மற்றும் ஆர்த்தி தம்பதிகள் குடும்ப பிரச்சனைகள் நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இவர் எப்படி இவ்வாறு கூறியுள்ளார் என சர்ச்சை எழுந்துள்ளது.
ஆனால் இந்த சர்ச்சைக்கு ரவிமோகன் தரப்பிலிருந்து எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரவி மோகன் மனைவியைக் கூட வெறுக்கின்றார் என்றால் பெற்ற மகன்களையும் அவர் நினைத்துப் பார்க்கவில்லையே என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |