விவாகரத்தாகி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த ரஞ்சித் - பிரியா ராமன்! தீயாய் பரவும் புகைப்படம்
நடிகர் ரஞ்சித்தும் நடிகை பிரியா ராமனும் விவாகரத்து செய்து 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.
ரஞ்சித் நடிகை பிரியா ராமனுடன் நேசம் புதுசு படத்தில் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இதனை தொடர்ந்து 1999ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பிரியா ராமனும் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படம் தயாரிக்கும் பணியில் இறங்கிய ரஞ்சித் பல கோடிகளை இழந்தார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில், விவாகரத்துக்கு பிறகு ரஞ்சித் - பிரியா ராமன் ஜோடி சுமார் 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் சமீபத்தில் தங்களின் திருமண நாளை கொண்டாடி உள்ளனர்.
மேலும் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர். விவாகரத்துக்கு பிறகும் இருவரும் மீண்டும் இணைந்திருப்பதை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.