ரஜினி, கமலை விட அதிக சம்பளம் வாங்கிய ராமராஜனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ரஜினி, கமலை விட அதிக சம்பளம் வாங்கிய ராமராஜனின் மொத்த சொத்து மதிப்பு தொடர்பிலான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகர் ராமராஜன்
தமிழ் சினிமாவில் எண்பதுகளின் இறுதியில் உச்சத்தில் இருந்தவர் நடிகர் ராமராஜன்.
இவர் நடித்த படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்து இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சேர்த்தது. உதவி இயக்குனராக சினிமாவிற்குள் வந்த இவர், நாளடைவில் உச்ச நடிகர்களில் ஒருவராக மாறி விட்டார்.
காமராஜன் நடித்த படங்களில் “கரகாட்டக்காரன் ” திரைப்படம் மதுரையில் ஒரு தியேட்டரில் ஓராண்டுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து எங்க ஊரு பாட்டுக்காரன், தங்கமான ராசா, ஊருவிட்டு ஊருவந்து, வில்லுபாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, ரயிலுக்கு நேரமாச்சு, பாட்டுக்கு நான் அடிமை ஆகிய படங்களில் யாரும் எதிர்பார்க்காத அளவு ஹீட் கொடுத்தார்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில் இன்றைய தினம் ராமராஜன் அவரின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
அந்த காலப்பகுதியில் ஒரு கோடி வரை சம்பளம் வாங்கிய காமராஜனிடம் தற்போது 41 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் இவர் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.
ஆனால் நளினியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |