பிரபல நகைச்சுவை நடிகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - சோகத்தில் திரையுலகம்
பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா(58) மாரடைப்பு சிகிச்சைக்கு பின் மரணமடைந்துள்ளார்.
பிரபல பாலிவுட் காமெடி நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா. ஸ்டேண்ட் அப் காமெடியனாக வாழ்க்கையை தொடங்கியவர்.
அதன் பின்னர் இந்தி படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தார். பின்னர் பிக் பிரதர், பாம்பே டூ கோவா உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்தார்.

இதனிடையே, ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. ஆனால் சுயநினைவின்றி வெண்டிலேட்டர் உதவியுடன் 41 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை 10:30 மணி அளவில் உயிரிழந்தார்.
தற்போது ராஜு ஸ்ரீவஸ்தவா மறைந்ததை அடுத்து திரையுலகினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.