வயதான காலத்தில் புதிய கெட்டப்பில் களமிறங்கிய பிரபலம்! ஆடிப்போன இளம் நடிகர்கள்
பிரபல நடிகர் கோட்சூட் அணிந்து வில்லன் போல் இருக்கும் புகைப்படம் ரசிகர்களை ஒரு நிமிடம் மிரள வைத்துள்ளது.
சினிமாவில் சாதனை
நடிகர் ராதாரவி கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான “மன்மத லீலை” என்ற திரைப்படத்தின் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார்.
இவர் முக்கிய படங்களில் கதாநாயகன், வில்லன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், டப்பிங் ஆர்டிஸ் என பல கேரக்டர்களில் நடித்து மக்கள் மத்தியில் அவருக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்மொழி படங்களில் நடித்து, மொத்தமாக 500 திரைப்படங்களுக்கு மேல் பிஸியாக இருந்து வருகிறார்.
புதிய கெட்டப்பில் கலக்கும் பிரபலம்
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ராதாரவி ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இவரை பார்த்த பலரும் ராதா ரவியா என சந்தேகிக்கும் வகையில் ஆடை வடிவமைப்பு இருந்தது.
இது குறித்து பலருக்கு பல கேள்விகள் எழுந்த போது, ஆடை வடிவமைப்பு துறையில் பிரபல்யமாக இருக்கும் அவரின் பேத்தியின் ஆசை எனவும், இவரின் அந்த ஆசையை நிறைவேற்றியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இவரின் பேத்தியான பவித்ரா சதீஷ் இந்த ஆடையை வடிவமைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் “வயசானாலும் இவரின் கெத்தும்,ஸ்டைலும் குறையல” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.