இறுதி சடங்கில் பிரதாப் போத்தனின் ஆசையை நிறைவேற்றிய குடும்பம் - அவர் சொன்ன அந்த விஷயம் என்ன?
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும் இயக்குநரகராவும் திகழ்ந்த பிரதாப் போத்தன் நேற்று காலமான சம்பவம் திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இறுதியாக பதிவிட்ட முகநூல் பதிவு இவரின் மறைவுக்கு பல திரை பிரபலங்கள் இரங்கல்களை தெரிவித்து வந்தனர். கடந்த சில நாட்களாகவே பிரதாப் போத்தன் மன உளைச்சலில் இருந்ததாகவும், பின் பேஸ்புக் பக்கத்தில் வாழ்க்கை குறித்தும் மரணம் குறித்தும் விரக்தியான ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அதில் ஜார்ஜ் கார்களின் வரிகளை குறிப்பிட்டு “மரணம் நாம் தினமும் எச்சில் விழுங்குவதால் ஏற்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரின் பதிவு வைரலாகிய நிலையில், பிரதாப் போத்தன் மறைவு இயற்கையாக நடந்ததா? அல்லது தற்கொலையா ? என சந்தேகங்கள் எழுந்தது.
மாரடைப்பால் மரணமா?
தொடர்ந்து அவர் நெஞ்சு வலி காரணமாக தான் இறந்துள்ளார் என முதல் கட்ட அறிக்கை வெளியாகியது. ஏனென்றால், சுமார் 8.00 மணியளவில் சமையல்காரர் மேத்யூ என்பவர் காபி கொடுக்க பிரதாப் போத்தன் படுக்கை அறைக்கு சென்றபோது பிரதாப் போத்தன் சுயநினைவின்றி மெத்தையில் படுத்த நிலையில் இருந்துள்ளார்.
இதனால் பதறிப்போன அவர் உடனே பிரதாப் போத்தனின் கார் டிரைவர் சுரேஷ் என்பவருக்கு செய்தியை தெரிவித்துள்ளார். அதன் பின்பு இருவரும் சேர்ந்து அப்பல்லோ மருத்துவமனையின் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
அப்பல்லோ மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்ததில் பிரதாப் போத்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து சென்றுள்ளனர்.
கடைசி ஆசை
இந்நிலையில், பிரதாப் போத்தனின் உடல் இன்று காலை சென்னை, கீழ்பாக்கத்தில் இருந்து அருகில் உள்ள வேலங்காடு மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு இறுதிச்சடங்குகள் நடந்த பின் பிரதாப் போத்தனின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவர்களின் வழக்கப்படி கிறிஸ்துவ முறைப்படி உடல் அடக்கம் செய்யப்படுவது தான் வழக்கம்.
ஆனால், தனது உடலை தகனம் செய்ய வேண்டும் என பிரதாப் போத்தன் முன்னரே அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்ததால் அவரது விருப்பப்படியே உடல் தகனம் செய்யப்பட்டது.
பிரதாப் போத்தனின் ஹிட் படங்கள்
பிரதாப் போத்தனின் இளமை கோலம், மூடுபனி, பன்னீர் புஷ் பங்கள், வறுமையின் நிறம் சிவப்பு குடும்பம் ஒரு கதம்பம், புதுமைப்பெண், ஜல்லிக்கட்டு, படிக்காதவன் ஆகிய படங்களின் இவரின் பாத்திரங்கள் பெறும் வரவேற்பை பெற்று தந்தது.
இவர் இதுவரை, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பிரதாப் போத்தன் சினிமாவில் நடிப்பைத் தாண்டி இயக்கத்திலும் வெற்றி கண்டவர்.
அதுமட்டுமில்லாமல், கமல், பிரபு, அமலா, குஷ்பூ போன்ற பிரபலங்கள் நடித்த ஆக்ஷன் த்ரில்லர் கலந்த படமான வெற்றிவிழா, பிரபு நடித்த மைடியர் மார்த்தாண்டன், நெப்போலியன் நடிப்பில் 1994-ல் வெளியான சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.
இந்தப் படங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
