முதல்வர் விஜய்க்கு நேரில் வாழ்த்து கூறிய நடிகர் பிரசாந்த்
முதல்வர் விஜய்
நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், சில கட்சிகளுடன் கூட்டணி வைத்து தற்போது முதலமைச்சராகவும் மாறியுள்ளார்.
பல தடைகளை தாண்டி முதலைமைச்சர் இருக்கையில் அமர்ந்துள்ள விஜய்யின் அடுத்தடுத்த செயல்கள் மக்களால் பெரிதும் கவனிக்கப்பட்டு வருகின்றனர்.

அண்ணா என்று மக்களின் குரல் எங்கு கேட்டாலும் உடனடியாக அதற்கு ரியாக்ஷன் கொடுத்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றார்.
இலங்கை நாடாளுமன்றம் வரை விஜய் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விஜய் முதலமைச்சர் அலுவலகத்திற்கு வரும் போது சாப்பாடு கையில் எடுத்து வருவதாக கூறப்பட்டது.

பிரசாந்த் வாழ்த்து
முதலமைச்சர் விஜய்க்கு சினிமா துறையில் இருந்து பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில், பல படங்களில் நடித்தவரும், கோட் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்தவருமான பிரசாந்த் தனது தந்தை தியாகராஜனுடன் முதலமைச்சர் விஜயைஅவரின் வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |