16 வருட வாழ்க்கை... மகனின் இறப்பு எப்படி ஏற்பட்டது? பிரகாஷ் ராஜின் முன்னாள் மனைவி ஓபன் டாக்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் பிரகாஷ் ராஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழி சினிமா துறையில் தனக்கென்று ஒரு சிறந்த பெயரை பெற்றவர்.
இவரின் வில்லத்தனமான நடிப்பு இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நடிப்பையும் தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமைகளை கொண்ட ஒரு அற்புத கலைஞர்.
என்னதான் திரை வாழ்க்கை இவருக்கு சிறப்பாக அமைந்தாலும் இவரது முதல் திருமண சிறப்பாக சரியாக அமையவில்லை.
நடிகர் பிரகாஷ் ராஜ் வாழ்வில் இரண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன பின்னர் தன்னை விட 12 வயது இளையவரான போனி கபூரை தனது 47 வயதில் திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு வேதாந்த என்ற ஒரு ஆண் பிள்ளையும் உள்ளது. இவரது முதல் மனைவி வேறு யாரும் இல்லை பிரபல நடிகையான லலிதா குமாரி தான்.
நடிகை லலிதா குமாரி அவர்கள் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர் சி. எல். ஆனந்தனின் மகளும், நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இவர் 1994 ஆம் ஆண்டு நடிகர் பிரகாஷ்ராஜை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூஜா, மேக்னா என மகள்களும், சித்து என்ற மகனும் உள்ளனர்.
பின் 2004-ம் ஆண்டு மகன் சித்து உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். அதன் பின்னர் லலிதா குமாரிக்கும், பிரகாஷ் ராஜுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2009 ஆம் ஆண்டு பிரிந்தனர்.
பிரிவுக்கான காரணம்
இந்நிலையில், தற்போது யூடியூப் சேனல் ஒன்றில் லலிதா குமாரி பேட்டியில் பேசுகையில், கணவருடன் வாழ்ந்த வாழ்க்கை பற்றி பகிர்ந்துள்ளார். "அவருடன் வாழ்ந்த 14, 15 வருடம் நன்றாக சென்றது. ஒரு நாள் எங்களுக்குள் சிறிய விரிசல் ஏற்பட்டது.
இரண்டு பேரும் உட்கார்ந்து பேசி, குழந்தைகளுக்காக விவாகரத்து பெற்றோம். விவாகரத்தை பெற பலருக்கும் இரண்டு வழி இருக்கிறது.
ஒன்று இருவரும் சண்டையிட்டு, கேவலப்படுத்தி பிரிவது. இரண்டாவது ஒருவருக்கு ஒருவர் புரிய வைத்து, அமைதியாக பிரிவது. இரண்டாவதை தான் நாங்கள் செய்தோம்.
குழந்தைகளுக்காக இதை செய்தாலும், நான் எதையாவது பேசபோய் அது செய்திகளில் வெளியாகி அவர்களை பாதித்துவிடக்கூடாது என இருவரும் கருதினோம்.
பின்னர், பிரகாஷ் ராஜூடம் ஏன் பிரிகிறாய் கேட்டேன் பிடிக்கவில்லை என சொன்னார். எனவே நம்மால் பசங்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என பிரகாஷிடம் சொன்னேன்.
நம்ம பிரிஞ்சதுக்கு, அப்பா, அம்மா அவங்களுக்கு நம்ம தான் என சொன்னேன் அவரும் அதை நன்றாகவே புரிஞ்சுக்கிட்டார். இப்பவும் அப்படிதான் அவர் உள்ளார்" என பேசியுள்ளார்.
மகனின் இறப்பு
மகன் இறந்ததை பற்றி பேசுகையில், அவனுக்கு இப்படி நடக்கும் என நினைக்கவே இல்லை. இரவு 8 மணிக்கு மாத்திரை சாப்பிடுகிறான். அதன் பின்னர் அவனுக்கு வலிப்பு ஏற்பட்டு 1 ஒரு மணிநேரம் நீடிக்கிறது.
பின்னர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க சொன்னேன். அவர்கள் மறுத்தனர். பின் சிகிச்சை அளித்தும், கோமாவுக்கு சென்று மகன் இறந்துவிட்டதாக காலை தெரிவித்தார்கள்.
அப்போது என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. திரும்ப வந்துவிடுவான் என நினைத்துகொண்டே இருந்தேன். இப்போது வரையும் அவன் நினைவில் தான் உள்ளேன் என வருத்ததுடன் தெரிவித்து உள்ளார்.
