தோலுக்கு மேல் வளர்ந்த மகன்களை பார்த்து ஏங்கும் பிரபு தேவா.. மகளை பற்றி என்ன சொன்னார்?
மகன்கள் தோலுக்கு மேல் வளர்ந்து விட்டார்கள். ஆனால் எனக்கு மாத்திரம் அவர்கள் குழந்தை போல் தெரிகிறார்கள் என பிரபு தேவா பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரபுதேவா
இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகரும், இயக்குனருமாக திகழ்பவர் தான் நடிகர் பிரபுதேவா.
இவர் பல ஆண்டு காலமாக தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
ரீ என்றி கொடுக்க பிரதீப் போட்ட கண்டிஷனால் ஆடிப்போன பிக்பாஸ் டீம் : இணையத்தை ஆக்கிரமித்த பிரதீபின் பதிவு
பிரபு தேவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்திருந்த மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை, தேள் ஆகிய திரைப்படங்கள் விமர்சனத்திற்குள்ளாகின.
இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 லும் கமிட்டாகியுள்ளார்.
மகன்கள் பற்றி என்ன சொன்னார்?
இந்த நிலையில் சமிபத்தில் ஊடகமொன்றிற்கு பேட்டி கொடுக்கும் போது குடும்பம் மற்றும் குழந்தைகளை பற்றி சில விடயங்கள் பகிர்ந்துள்ளார்.
அதாவது, “நான் குழந்தைகளுடன் அதிகமாக நெருக்கமாவதில்லை. ஏனெனின் குழந்தைகளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லையென்றாலும் எனக்கு ஒரு மாதிரியாகி விடும்.
எந்நேரமும் அவர்களை பற்றி தான் சிந்தித்து கொண்டிருப்பேன். எல்லோரிடமும் ஒரு இடைவெளி இருப்பது நல்லது.
அதிலும் முக்கியமாக குழந்தைகளிடம் இருப்பது நல்லது. என்னுடைய மகன்களுக்கு தற்போது 20,15 வயதாகின்றது. ஆனாலும் அவர்கள் குழந்தைகள் போல் தான் தெரிகிறது..” என உருக்கமாக பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |