த்ரிஷாவால் தான் விஜய்கு பிரச்சினை... மரியாதை மொழியில் வெளுத்துவாங்கிய பார்த்திபன்!
குந்தவை வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது என நடிகர் பார்த்திபன் மேடை நிகழ்ச்சியொன்றில் பேசிய விடயம் இணையத்தில் வைராலாகி சர்ச்சை ஆன நிலையில், முற்றிலும் முட்டாள்தனமான கருத்து என திரிஷா மறைமுகமாக விமர்சித்து நடிகை த்ரிஷா அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி பார்த்திபன் நீண்ட காணொளியொன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார். அதில் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்பாரோ என எதிர்ப்பார்கப்பட்ட நிலையில் மீண்டும் தாக்கி பேசியுள்ளார். குறித்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

பார்த்திபன் ஓபன் டாக்
நான் த்ரிஷா பற்றி விருப்பப்பட்டு கேட்டு அப்படி பேசினேன் என்பது பொய். த்ரிஷாவின் புகைப்படம் வந்ததும் நான் திகைத்துவிட்டேன். நான் யாருக்கும் அடிமையாக இல்லை, காசு வாங்கிட்டு அப்படி பேச போகவில்லை.
காசு வாங்கிட்டு நான் எந்த காட்சியிலும் போய் சேரப்போறது இல்லை. நானே போட்டோ போடுங்க பேசுகிறேன் என சொல்கிறேன் என்றால், மகளிர் தினத்தன்று நான் வேலு நாச்சியார், டயானா சார்ள்ஸ், மதர் தெரசா பற்றி பேச ஆசைப்பட்டிருக்கலாம். இப்படி இவரை பற்றி பேச ஆசைப்பட்டேன் என சொல்வது சரியல்ல.

நண்பர் விஜக்கு கரூர் பிரச்சனையில் கூட இந்த அளவுக்கு பாதிப்பும் விமர்சனங்களும் எழவில்லை. ஆனால் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிந்தும் அந்த திருமண நிகழ்ச்சிக்கு அவர் வராமல் இருந்திருக்கலாம் என தான் அப்படி ஆதங்கத்தில் குந்தவை வீட்டிலேயே குந்தவைக்கப்பட்டால் நல்லது என பேசினேன். அது உண்மையிலேயே ஒரு பெரிய ஆதங்கம் விஜய் மீதான அதீத அக்கறையின் வெளிப்பாடு.
நான் பிரச்சனைகளை விரும்பாதவன். அதனால் அந்த மீடியாவுக்கு மெசேஜ் செய்து அதை நீக்கிவிடும்படி சொல்லிவிட்டேன்.ஆனால் வேறு வழியில் அது வெளியாகிவிட்டது.
நான் ஒரு நபரை பற்றி தான் சொன்னேன், எல்லா பெண்களையும் வீட்டில் இருக்கும்படி சொன்னேன் என மாற்றிவிட்டார்கள். அது உண்மை கிடையாது.

சமீப காலத்தில் த்ரிஷாவை பற்றி வந்த மோசமான விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்லாமல், எனக்கு மட்டுமே கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்" என த்ரிஷாவை காணொளியிலும் தாக்கி பேசி இருக்கிறார் பார்த்திபன். குறித்த காணொளிக்கு நெட்டிசன்கள் மத்தியில் பலத்த ஆதரவு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |