கொடிக்கட்டி பறந்த நடிகர் நெப்போலியனின் மகனுக்கு இப்படி ஒரு நிலையா? பிறந்த நாளில் உருக்கம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகர் நெப்போலியன். இவர், திருச்சியில், 1963-ம் ஆண்டு பிறந்தார்.
இவருடைய உண்மையான பெயர் குமரேசன் துரைசாமி. இவரது குடும்பத்தில் 6 குழந்தைகள்.
நெப்போலியனின் ஆரம்பம்
இவர் அதில், 5வது மகன் ஆவார். திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தார். 27 வயதில் உதயம் என்ற படத்தினை பார்த்து இவருக்கு நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.
அதன் பின் போராடி 1991ல் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து பல படங்களில் நடிக்க இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதுவரை கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.
அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது இவரது குடும்பம் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் வசித்து வருகின்றனர்.
குடும்பம்
நெப்போலியன் அவர்களுக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ், குணால் என இரண்டு மகன்களும் உள்ளனர்.
நடிகர் நெப்போலியன் அவர்கள் தற்போது ஹாலிவூட் படத்தில் நடித்து உள்ளார். படத்தின் பெயர் கிறித்துமஸ் கூப்பன். டேனியல் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
மகனின் பரிதாப நிலை
இந்நிலையில், நெப்போலியன் குடும்ப புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. தனுசு, குணால் என்ற 2 மகன்கள் இருப்பது தெரியும்.
அதில் இளையவரான தனுசு நடக்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்காக தான் இவர்களுடைய மொத்த குடும்பமே அமெரிக்காவில் தான் ஆகி உள்ளார்கள்.
பிறந்தநாளில் உருக்கம்
அங்கு தனுஷிற்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டு வருகிறது. அண்மையில், மகன் தனுஷின் 24வது பிறந்தநாளை கொண்டாடிய நெப்போலியன், அன்பு நண்பர்களே, தமிழ் சொந்தங்களே எங்கள் மூத்த மகன் தனுஷின் 24வது பிறந்த நாளை கொண்டாடினோம்.
சிறு வயது முதல் அமெரிக்காவில் வாழ்வதால் ஆங்கில பாடல்களையே அதிகம் பாடிக்கொண்டிருக்கும் எங்கள் இளைய மகன் குணால் அவனது அண்ணனுக்காக ஒரு தமிழ்பாட்டு பாடி எங்கள் அண்ணனுக்காக மகிழ்வித்தான் என தெரிவித்துள்ளார்.