மனைவியின் பிறந்த நாளில் நெப்போலியன் வெளியிட்ட உருக்கமான வீடியோ.. குவியும் வாழ்த்துக்கள்
நடிகர் நெப்போலியன் தனது மனைவி சுதாவின் பிறந்தநாளை கொண்டாடியதுடன், காணொளியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் நெப்போலியன்
தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக வலம்வந்தவர் தான் நெப்போலியன். பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களைக் கட்டிப்போட்டிருந்தார்.
பின்பு சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த இவர் திமுக ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் இருந்தார். அத்தருணத்தில் அவரது மகனுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் அரசியலில் இருந்தும் விலகினார்.

பின்பு அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலான நெப்போலியன் அங்கு சொந்தமாக கம்பெனி நடத்தி வருவதுடன், விவசாயத்தையும் செய்து வருகின்றார்.
நெப்போலியனுக்கு ஜெயசுதா என்ற மனைவியும் தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். தனது குடும்பத்தின் மீது தீரா காதல் கொண்ட நெப்போலியன் தற்போது காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ஆம் தனது மனைவி ஜெயசுதாவின் 51வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதில் நண்பர்களே டிசம்பர் 24 , 2023... எனது மனைவியின் 51வது பிறந்தநாள். எனது மூத்த சகோதரர் மற்றும் எனது மைத்துணருடன் எங்கள் குடும்ப நண்பர் வழக்கறிஞர் ஆசிரியரின் இல்லத்தில் கொண்டாடினோம் என்று தகவல் தெரிவித்து இருந்த நிலையில் இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
நெப்போலியன் மனைவிக்கு பலரும் வாழ்த்து கூறிவரும் நிலையில், மகனுக்காக அவர்கள் கட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |