விஜய்யின் எந்த படங்களையும் நான் பார்த்ததில்லை: 15 வருட மனக்கசப்பை மனம் திறந்த நெப்போலியன்!
விஜய்யின் எந்த படங்களையும் நான் பார்ப்பதில்லை எனவும் அவருக்கும் எனக்கும் 15 வருடங்களாக மோதல் ஏற்பட்டதைப் பற்றியும் பிரபல நடிகரான நெப்போலியன் தெரிவித்திருக்கிறார்.
நடிகர் விஜய்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் ஆரம்பித்து இன்று வாரிசு திரைப்படம் வரை உச்ச நடிகராக வலம் வருபவர்.
விஜய் எப்போதும் ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்பவர். அதனாலும் கூட அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது.
அண்மையில் கூட விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாகி சூப்பராக ஓடிக்கொண்டிருக்கின்றது.
தற்போது விஜய்யிற்கும் அவரின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பேசிக்கொள்வதில்லை என்ற தகவலும் வைரலாகி வருகின்றது.
15 வருட மோதல்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நெப்போலியன். இவர் தற்போது அமெரிக்காவில் 12 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
அண்மையில் கூட அவரின் அமெரிக்கா வீடு படும் வைரலாக பரவிவந்தது. இந்நிலையில் அந்த வீடியோவிற்குப் பின் இவர் பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார்.
அவ்வாறு சமீபத்தில் பேட்டி ஒன்று பேசிய வேளையில் விஜய்யுடனான மோதல் குறித்து பேசியிருந்தார். அதில், போக்கிரி படத்தின் போது ஒரு சம்பவம் நடந்தது. அதற்கு பின் நானும் விஜய்யும் பேசிக்கொள்வதில்லை. அதனால் அவரது படங்கள் எதுவும் நான் பார்ப்பதில்லை.
விஜய் ரெடினா... அவரோடு எப்போ வேண்டுமானாலும் பேச நான் ரெடி. அவருடன் இணைந்து நடிக்க நான் ரெடி... விஜய் அதற்கு ரெடியானு அவர்கிட்ட தான் கேட்கனும். ஏன்னே அவர் பெற்ற தாய், தகப்பனிடமே பேசாமல் இருக்கிறாரே.
இன்றைக்கு ஊர், உலகமெல்லாம் அதைப்பற்றி தான் பேசுகிறது. அது உண்மையா, பொய்யானு கூட எனக்கு தெரியாது. ஆனா அமெரிக்கா வரைக்கு அந்த செய்தி வந்திருக்கு. முதலில் அவர் தாய், தகப்பனுடன் சமரசம் ஆகட்டும். அதன்பின் யோசிப்போம்.
எனக்கு விஜய்க்கு ஏற்பட்ட மோதல் நடந்து 15 வருஷம் ஆகிவிட்டது. இவ்ளோ நாள் இடைவெளிக்கு பின் விஜய் என்னுடன் பேச தயாராக இருப்பாரா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் பேச நான் ரெடி” என தெரிவித்துள்ளார்.