மனதை நோகடிக்க வேண்டாம்! மகன் பற்றிய விமர்சனத்திற்கு நெப்போலியனின் வேண்டுகோள்
பிரபல நடிகரான நெப்போலியனின் மகனுக்கு ஜப்பானில் சிறப்பாக திருமணம் நடக்கவிருக்கும் நேரத்தில் பலரது விமர்சனங்கள் இணையத்தில் பரவி வருகின்றது. இதற்கு நெப்போலியன் ஒரு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
நெப்போலியன் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் 90ஸ்களின் நாயகனாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் நெப்போலியன். இவர் நடிப்பில் பிஸியாக இருந்த போதிலும் அரசியலையும் விடவில்லை.
இவர் சினிமாவிற்கு பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருப்பதால் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி அங்கு தொழில் செய்து வருகிறார்.
தனது மகனுக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தார். அதன்படி பெண் பார்த்து நிச்சயதார்த்தமும் அண்மையில் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து திருமணம் ஜப்பானில் விரைவில் நடக்கவிருக்கிறது. இதற்காக குடும்பத்தோடு ஜப்பான் சென்றிருக்கிறார் நெப்பொலியன்.
இதற்கிடையே சிலர் தனுஷுக்கு ஏன் இப்போது திருமணம் என்று விமர்சனத்தை முன்வைத்துவந்தனர். இதில் முக்கியமாக பயில்வான் ரங்கநாதன் போன்றோர் எல்லாம், தனுஷால் ஒரு பெண்ணின் வாழ்க்கை சீரழியப்போகிறது என்று எல்லை மீறி பேசியிருந்தார்.
இதை எல்லாம் பொறுத்து பொறுத்து கொண்டிருந்த நெப்போலியன் தற்போது உருக்கமான வெண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இவர் கூறியதன் படி "எனது அன்பு நண்பர்களே, உலகமெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களே! எங்களது மூத்த மகன் தனுஷின் எட்டு வருட கனவு.
இந்தியாவில் பிறந்தாலும் சூழ்நிலை காரணமாக உலகத்தின் ஒரு கோடியில் இருக்கும் அமெரிக்காவில் வசிக்கிறோம்.
இப்போது மறுகோடியான ஜப்பானுக்கு பயணம் செய்ய ஒரு வருடம் திட்டமிட்டு ஆறு மாதங்களாக அதற்கு செயல் வடிவம் கொடுத்து ஒரு மாதமாக பயணம் செய்து இப்போது தனுஷின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறோம்.
இத்தருணத்தில் சில விஷயங்களை உங்களிடம் பகிர ஆசைப்படுகிறேன். எங்கள் வாழ்வை தவறாக விமர்சிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் வைக்கிறேன். நம் பெற்றோரின் கனவுக்காகவும், நமது கனவுக்காகவும், நமது பிள்ளைகளின் கனவுக்காகவும் அவசியம் வாழ வேண்டும்.
அப்படி வாழ்ந்துதான் பார்க்க வேண்டும். கடமையை நிறைவேற்ற வேண்டும். வாழ்க்கை ஒருமுறைதான். வாழ்ந்துதான் பார்ப்போமே. உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்யாதீர்கள்.
உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். எல்லோரையும் வாழ்த்துங்கள். பிடிக்கவில்லை என்றால் இழிவாக மட்டும் பேசாதீர்கள்.
அது ஒருநாள் உங்களுக்கே திரும்பிவிடும். எண்ணம்போல்தான் வாழ்க்கை. நன்றாக யோசியுங்கள் சிந்தனையை செயல்படுத்துங்கள்.' என பேசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |