பிள்ளைகளால் துரத்திவிடப்பட்ட பிரபலம்! நடிகர் ஆனந்த் பாபு வாழ்வில் நடந்தது என்ன?
தமிழ்சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் ஆனந்த் பாபு.
நடிகர் ஆனந்த் பாபு
தமிழ் சினிமாவில் இப்போதும் பெருமைமிகு நடிகராக பார்க்கப்படுபவர் நகைச்சுவை நடிகர் நாகேஷ். எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் மிக முக்கியமான காமெடி நடிகராக வலம்வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஆவார்.
இவரது மகன் நடிகர் ஆனந்த் பாபு. கடந்த 1986ம் ஆண்டில் வெளியான தங்கைக்கோர் கீதம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்து மிகச்சிறந்த நடிகராகவும், டிஸ்கோ டாஸ்ஸிலும் மிகச்சிறந்து விளங்கினார். தமிழில் அதிகமான படங்களை நடித்த இவர் பின்பு நடிப்பிலிருந்து விலகி இருந்தார்.
கடந்த 1985ம் ஆண்டு சாந்தி என்ற பெண்ணை திருமணம் செய்த இவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். மகன் அஜய் தமிழ் சினிமாவில் நாயனாக நடித்து வருகின்றார்.
குடி பழக்கத்திற்கு அடிமையான சோகம்
ஒரு கட்டத்தில் குடி பழக்கத்திற்கு அடிமையான இவர் குடும்பத்தினை கவனிக்காமல் இருந்துள்ளார். பின்பு இவரது தந்தை நாகேஷ் தான் ஆனந்த் பாபுவின் குடும்பத்தை பார்த்துக் கொண்டார்.
இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஆனந்த் பாபுவின் மனைவி சாந்தி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தார்.
தந்தையின் சொத்தை முழுவதும் குடித்து அழித்ததுடன், பிள்ளைகளையும் கொடுமை செய்த நிலையில், பிரிவிற்கு பின்பு பிள்ளைகள் யாரும் இவரை பார்க்கவில்லையாம்.
பின்பு மௌனராகம் சீரியலில் மீண்டும் தனது நடிப்பை மீண்டும் ஆரம்பித்தார். அதுமட்டுமில்லாமல் தற்போது ஒளிபரப்பாகிவரும் முத்தழகு சீரியலிலும் நடித்து வருகின்றார்.
நடிகர் ஆனந்த் பாபுவை அவர் பெற்ற பிள்ளைகளே துரத்தி விட காரணம் அவரது போதை பழக்கமும், குடும்பத்தை அவர் செய்த சித்ரவதைகளும்தான் என்று தெரிந்த தமிழ் சினிமா ரசிகர்கள் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |