15 வருடங்களாக நடிகர் நாகார்ஜுனாவை வாட்டும் நோய் - இன்னும் குணமாகவில்லையா?
நடிகர் நாகார்ஜுனாவிற்கு தற்போது 66 வயதாகும் நிலையில் அவருக்கு 15 வருடங்களாக ஒரு நோய் இருக்கிறது அது தற்போது குணமாகியுள்ளதா இல்லையா என்பதை பதிவில் பார்க்கலாம்.
நடிகர் நாகார்ஜுனா
நடிகர் நாகார்ஜுனாவை தெரியாதவர் இருக்க வாய்ப்பில்லை. 20 இல் எப்படி இரந்தாரோ அதே லுக்கில் தான் இப்போதும் இருக்கிறார். இந்த வயதிலும் உடற்பயிற்சி செய்து அசத்துகிறார்.
அது மட்டுமல்லாமல் வயதாக ஆக ஃபிட்னஸ், கிளாமர் என அனைத்தும் கூடிக்கொண்டே தான் செல்கிறது. இதனால் பல ரசிகர்களை இவர் சம்பாதித்து வைத்துள்ளார்.

ஆனால் பார்ப்பதற்கு மிகவும் ஆக ஃபிட்னஸ், கிளாமர் ஆக இருக்கும் நாகார்ஜுனாவையும் 15 வருடமாக ஒரு உடல் நலப்பிரச்சனை வாட்டுகிறது என்றால் யாரால் நம்ப முடியும். கடந்த 15 வருடமாக நடிகர் நாகார்ஜுனாவிற்கு இருக்கும் நோய் முட்டி வலி தான்.
இந்த முட்டி வலி மிகவும் கொடூரமாக நாகார்ஜுனாவை வாட்டி எடுத்துள்ளது. ஆனால் இந்த உடல் பிரச்சனை பற்றி அவர் ஒரு பேட்டியில் பேசி உள்ளார்.

முட்டி வலி
நாகார்ஜுனா கூறும் போது ''15 ஆண்டுகளுக்கு முன் மூட்டு வலி தொடங்கியது. அறுவை சிகிச்சை தேவை என்றாலும், நான் அதைத் தவிர்த்தேன். லூப்ரிகன்ட் மற்றும் PRP சிகிச்சை எடுத்தேன்.
தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். இப்போது நலமாக உள்ளேன்'' என கூறியு்ளார். அதாவது நாகார்ஜுனா ஆரோக்கியமாக இருப்பதாக கூறினார். உடல் நலத்தை கவனிப்பதுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிஸியாக உள்ளார்.
சீசன் 3 முதல் அவரே தொகுப்பாளர். மேலும், தனது 100வது படத்திற்கான வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இவ்வளவு ஃபிட்னஸ் மற்றும் கிளாமருடன் இருக்கும் நாகார்ஜுனாவிற்கு இப்படி ஒரு பிரச்சனை இருந்ததா என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |