கையில் மருதாணி தடவினால் கல்லீரல் புண்கள் குணமாகுமா? ஆய்வாளர் கண்டுபிடிப்பு
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் கைகளிலும் தலைமுடியிலும் மருதாணி தடவுவது கல்லீரலை பாதுகாப்பாக வைத்திருக்கும் எனப்படுகின்றது.
மருதாணி
ஜப்பானில் உள்ள ஒசாகா பெருநகர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பயோமெடிசின் & பார்மகோதெரபி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வை நடத்தினர்.
அந்த ஆராய்ச்சியில் மருதாணியில் கல்லீரல் ஃபைப்ரோஸிஸைக் குணப்படுத்தக்கூடிய சேர்மங்கள் உள்ளன என்பது தெரியவந்தது.
கல்லீரல் ஃபைப்ரோஸிஸ் என்பது கல்லீரல் தொடர்ந்து சேதமடையும் போது, ஆரோக்கியமான திசுக்கள் வடு திசுக்களால் மாற்றப்பட்டு, கல்லீரலின் இயல்பான செயல்பாட்டைப் பாதிக்கும் ஒரு நிலையாகும்.
அதிகமாக மது அருந்துபவர்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பவர்கள் அல்லது ஹெபடைடிஸ் பி அல்லது சி உள்ளவர்கள் கல்லீரல் ஃபைப்ரோஸிஸை உருவாக்கும் அபாயத்தில் உள்ளனர்.

ஆய்வு
கல்லீரல் பாதிப்புகள் ஆரம்பத்தில் எவ்வித அறிகுறியும் இல்லாமல், மெதுவாக உடலை சேதப்படுத்துகின்றன. அதில் மிகவும் ஆபத்தான ஒன்றுதான் கல்லீரல் ஃபைப்ரோஸிஸ்.
இந்த நிலை முழுமையாக குணமாகுமா? மருதாணி போன்ற மூலிகைகள் உண்மையிலேயே இதை சரி செய்யுமா? அல்லது இது சிரோசிஸாக மாறும் முன் தடுக்க முடியுமா? என பல கேள்விகள் உள்ளது.
இதை மருத்துவர் கல்லீரல் அல்லது வேறு எந்த உறுப்பும் காயமடைந்து குணமடைந்த பின்னர் சில பகுதிகளில் ஃபைப்ரோஸிஸ் உருவாகலாம். இது காயத்தின் தீவிரத்தைப் பொறுத்து காணப்படும்.

உடலில் வடுக்கள் ஏற்படுவது போல, உறுப்புகளிலும் வடுக்கள் உருவாகின்றன. இந்த வடு ஃபைப்ரோஸிஸ் என்று அழைக்கப்படுகிறது. கல்லீரல் காயமடையும் போதெல்லாம், அது வீக்கமடைகிறது. காயம் கடுமையாக இருந்தால், ஃபைப்ரோஸிஸ் ஏற்படும் அபாயம் உள்ளது.
மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் ஃபைப்ரோஸிஸ் ஏற்படலாம். ஹெபடைடிஸ் பி மற்றும் சி தொற்றுகளும் இந்த நிலையை ஏற்படுத்தக்கூடும்.
ஆட்டோ இம்யூன் நோய்கள் உள்ளவர்களுக்கும் இந்த நிலை ஏற்படலாம். கொழுப்பு நிறைந்த கல்லீரல் படிப்படியாக ஃபைப்ரோஸிஸ் அல்லது வடுவாக மாறக்கூடும்.
மருதாணியால் குணப்படுத்த முடியுமா?
- ஒரு ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் எலிகளுக்கு மருதாணியில் உள்ள ஒரு குறிப்பிட்ட செயல்வீரிய சேர்மத்தை கொடுத்தனர். அந்த சேர்மம் உடலில் சேர்ந்து இரத்த ஓட்டத்தில் கலந்து, பின்னர் எலிகளின் உடல் நிலை பரிசோதிக்கப்பட்டது.
- எலிகளுக்கு மேற்பூச்சாக அல்லது கைகளில் மருதாணி பயன்படுத்தவில்லை. அதனால், சமூக வலைதளங்களில் பரவுகின்ற “மருதாணி தடவினால் கல்லீரல் ஃபைப்ரோஸிஸ் குணமாகும்” என்ற தகவல் தவறானது.
- ஆய்வின்படி அந்த செயல்வீரிய சேர்மம் கல்லீரல் ஃபைப்ரோஸிஸின் தீவிரத்தை குறைக்க முடியும், ஆனால் அது பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றால் கைகளில் தடவாமல் நரம்பு வழியாக அல்லது உட்கொள்ளும் முறையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். மேற்பூச்சாக பயன்படுத்தினால் எந்த நன்மையும் கிடையாது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |