சமந்தா, நாகசைதன்யா விவாகரத்து: நாகார்ஜுனா குடும்பத்தில் அடுத்தடுத்து விவாகரத்தில் முடியும் திருமணங்கள்! யார் விட்ட சாபம்?
கடந்த சில நாட்களாகவே சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் இந்திய திரையுலகில் பெரும் பேச்சு பொருளாக மாறியுள்ளது.
தெலுங்குத் திரையுலகத்தில் தனித்துவமாக தனது வாழ்க்கைப் பயணத்தை நடத்தியவர் மறைந்த நடிகர் அக்கினேனி ஏ.நாகேஸ்வரராவ். அவர் மீதும் அவருடைய படங்கள் மீதும், அவரது குடும்பத்தின் மீதும், தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு இன்றளவும் தனி மரியாதை உண்டு.
அதே சமயம் அக்கினேனி குடும்பத்தில் உள்ள பலருக்கும் அவர்களது முதல் திருமணம் வெற்றிகரமாக அமையாமல் விவாகரத்தில் முடிந்தது தான் காலத்தின் முடிவாக உள்ளது.
நாகேஸ்வரராவின் மகன் நடிகர் நாகார்ஜுனா, பிரபல தயாரிப்பாளர் டி.ராமாநாயுடுவின் மகளும், நடிகர் வெங்கடேஷின் சகோதரியுமான லட்சுமியை முதல் திருமணம் செய்து, பின்பு நகை அமலா மீது காதல் கொண்டதும் லட்சுமியை விவாகரத்து செய்துவிட்டார்.
நாகார்ஜுனா, லட்சுமி தம்பதியினரின் மூத்தமகன் தான் நாக சைதன்யா. இவருக்கு தற்போது சமந்தாவுடன் விவாகரத்து ஆகியுள்ளது.
நாகார்ஜுனா, அமலா தம்பதியினரின் மகன் அகில். இவருக்கும் ஷ்ரியா பூபால் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இறுதியில் திருமணம் செய்யாமல் அதனை ரத்து செய்துள்ளார்.
இதேபோல் நாகார்ஜுனாவின் சகோதரி மகன் நடிகர் சுமந்த். இவருக்கும் நடிகை கீர்த்தி ரெட்டிக்கும் திருமணம் நடந்ததோடு, வெறும் இரண்டு வருடத்திலேயே இருவரும் பிரிந்துள்ளனர்.
இவ்வாறு அக்கினேனி குடும்பத்தில் உள்ளவர்களின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்து வரும் நிலையில், இது ஏதோ ஒரு விதமான முன்னோர்கள் இட்ட சாபமாக தோன்றுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.