முதல்வர் விஜயின் முயற்சி வீணாகிவிட்டதே... நடிகர் முத்துக்காளையின் மனைவி உயிரிழப்பு
பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளை மனைவி நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடிகர் முத்துக்காளை
தனது 18 வயதில் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கி அப்படியே சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றத் தொடங்கியவர் தான் நடிகர் முத்துக்காளை.

ஆனால் இவரால் கல்வியை தொடர முடியாமல் போனது.பின்னர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.அப்படியே சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றத் தொடங்கினார். அவரின் நகைச்சுவைகளுக்கு இன்றும் ரசிகர்கள் இருக்கின்றார்கள்.
சில தினங்களுக்கு முன்னர் தனது மனைவியைக் காப்பாற்ற வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். உடனே அவருக்கு அரசு தரப்பில் இருந்து அதிகாரிகள் சந்தித்து உதவி செய்வதாக கூறியிருந்தனர்.

முத்துக்காளை மனைவி மாலதியின் தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக ஏற்கனவே அறுவை கிசிச்சை நடந்துள்ளது.
ஆபரேஷனுக்கு பின்னர் கடந்த 17 நாட்களாக நுரையீரல் தொற்று காரணமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி வந்த நிலையில், நடிகர் முத்துக்காளை ஒரு வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

அதில் தன்னுடைய மனைவியின் உயிரைக் காப்பாற்றித் தரும்படி கோரிக்கை வைத்தார். குறித்த விடயம் இணையத்தில் வைரலாகியிருது.
இந்த நிலையில் முத்துக்காளை மனைவி மாலதி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |