விமான நிலையத்தில் தாலியை காட்டி பெண் ரசிகை செய்த செயல்! திணறிய மைக் மோகன்
பிரபல நடிகர் மைக் மோகன் தனது ரசிகை ஒருவரைப் பற்றி கூறிய விடயம் பலரையும் வியக்க வைத்துள்ளது.
மைக் மோகன்
நடிகர் மோகன் மைசூர் மாவட்டம் உடுப்பியில் பிறந்து வளர்ந்தவர். இவரின் உண்மையான பெயர் மோகன் ராவ். சினிமாவுக்கு வந்த பின்பு மோகன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்ட நிலையில், இவர் பல படங்களில் மைக் வைத்துக் கொண்டு பாடும் பாடல்கள் இடம்பெற்றதால், இவரை ரசிகர்கள் மைக் மோகன் என்று அழைத்தனர்.
1980 ஆம் ஆண்டு வெளியான 'மூடுபனி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், பின்பு 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் மாபெரும் இடத்தை பிடித்தார்.
அதிகமான படங்களில் நடித்த இவர், ரஜினி கமல்ஹாசனை விட சம்பளம் அதிகமாக வாங்கியதாக கூறப்பட்டது. சினிமாவில் நீடித்து இருப்பார் என்று பலரும் எதிர்பார்க்கப்படட நிலையில், இவருக்கு வரக்கூடாத நோய் ஒன்று வந்துவிட்டதாக நடிகை ஒருவர் கூறி வதந்தி, இவரது திரையுலக வாழ்க்கையை கேள்விக் குறியாக மாற்றியது.
பின்னர் திரையுலகில் இருந்து முழுமையாக ஒதுங்கிய இவர், அப்படி எந்த வியாதியும் தனக்கு இல்லை என நிரூபித்து தற்போது வரை ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் 'ஹாரா' படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். இந்த படம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தளபதி படத்திலும் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகை கொடுத்த ஷாக்
இந்நிலையில் நடிகர் மோகன் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், ரசிகை ஒருவருடன் நடந்த சந்திப்பு குறித்து பகிர்ந்துள்ளார்.
ஒருமுறை மலேசியா சென்று சென்னை திரும்பி வந்தபோது, விமான நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அவரிடம், ரசிகை என்று தன்னை அறிமுகம் செய்து பேசியுள்ளார்.
குறித்த பெண் மகனுடன் நின்றிருந்த நிலையில், அந்த பையன் அம்மா அதை காட்டுங்கள் என்று கூறியுள்ளார். உடனே அப்பெண் தனது கழுத்தில் அணிந்திருந்த தாலியை எடுத்து காட்டியுள்ளார்.
மோகன் அதனைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார். அப்பெண் தாலியுடன் மோகன் படம் உள்ள லாக்கெட் ஒன்றினை அணிந்துள்ளார்.
திருமணமான புதிதில் தனது கணவரிடம் உங்களை பிடிக்கும் என்று கூறி, இந்த லாக்கெட்டை காட்டினேன். அதற்கு அவர் உன் கழுத்திலேயே போட்டுக்கொள் என்று கூறினாராம்.
அன்றிலிருந்து கழுத்தில் தாலியுடன் போட்டுக்கொண்டதாகவும், தான் சாகும் வரை எனது தாலியிலேயே வைத்திருப்பேன் என்று கூறி மோகனை நிலைநடுங்க வைத்துள்ளதாக பேட்டியில் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |