மறைந்த நடிகர் மயில்சாமியின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்திய விடயம்
மறைந்த நடிகர் மயில்சாமியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் மயில்சாமி
பிரபல நடிகர் மயில்சாமி(57) சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில், அவரது இறுதி சடங்கும் ரசிகர்களின் கண்ணீர் மல்க நடந்து முடிந்தது.
தீவிர சிவபக்தனான இவர் கடந்த 18ம் தேதி மஹா சிவராத்திரி பூஜைக்காக கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஷ்வரர் கோவிலில் ட்ரம்ஸ் சிவமணியுடன் கலந்து கொண்டுள்ளார்.
பூஜை முடிந்து 4 மணியளவில் வீடு திரும்பிய அவர் 5.30 மணியளவில் வீட்டிற்கு வந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியிலேயே உயிரும் பிரிந்தது.
மிகவும் தாராளமாக உதவி செய்யும் குணம் கொண்ட இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாகவே இருக்கின்றனர்.
மயில்சாமியின் சொத்து மதிப்பு
இந்நிலையில் பல உதவிகளை செய்த மயில்சாமியின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. அதன்படி மயில்சாமிக்கு சாலிகிராமத்தில் ஒரு வீடும்; சென்னையில் இன்னொரு வீடு இருப்பதாகவும், 5 கார்களும், 7 இருசக்கர வாகனங்களும் என அவரது மொத்த சொத்து மதிப்பு 18 கோடி ரூபாய் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் உதவி செய்து குடும்பத்தில் நடுரோட்டில் விட்டுவிடுபவர்களின் மத்தியில், மயில்சாமியின் செயல் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.