மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக கொடுத்த நடிகர் மயில் சாமி- காரணம் என்ன? குவியும் வாழ்த்துக்கள்
தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர வேடங்களில் கலக்கியவர் நடிகர் மயில் சாமி,. இவரின் நகைச்சுவைக்கு ரசிகர்கள் ஏராளாம்.
இதையடுத்து இவர், அண்மையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அப்போது, பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக கொடுத்துள்ளார்.
இவர் கொடுத்த கிப்ஃட் திருமணத்துக்கு வந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், இதுகுறித்து நடிகர் மயில்சாமி கூறியதாவது: “பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு மக்களின் கோரிக்கையை தெரியப்படுத்துவதற்காகத் தான் இவ்வாறு செய்தேன்.
தமிழக அரசு பெட்ரோல் விலையை ரூ.3 குறைத்ததை வரவேற்கிறேன்” என அவர் தெரிவித்தார். இதற்கு ரசிகர்கள் மட்டுமின்றி, பல நெட்டிசன்களும், இவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
