நடிகர் லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? வைரலாகும் புகைப்படம்
பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள்களின் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் லிவிங்ஸ்டன்
80 மற்றும் 99களின் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்ந்தவர் நடிகர் லிவிங்ஸ்டன்.
இவர் தமிழில் டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் சிறு சிறு கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தவர்.
நாளடைவில் 'சுந்தரபுருஷன்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். பின்னர் சொல்லாமலே, விரலுக்கேத்த வீக்கம் மற்றும் என் புருஷன் குழந்தை மாதிரி போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
தற்போது சினிமாவை விட்டு விலகி அவ்வப்போது சில படங்களில் தலைகாட்டி வருகின்றார்.
லிவிங்ஸ்டனின் மகள்கள்
லிவிங்ஸ்டனுக்கு ஜோவிதா மற்றும் ஜெம்மா என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இதில் ஜோவிதா எமக்கு நன்கு பரிட்சயமானவர் தான்.
சன் டிவியில் பூவே உனக்காக மற்றும் அருவி போன்ற தொடர் நாடகங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இப்புகைப்படங்களை பார்த்த நெட்டிசன் லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு அழகான மகள்களா என வாய் பிளந்து பார்த்து வருகின்றார்கள்.